தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் விஜய் மிகப்பெரிய தேர்தல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், பெரும்பான்மையை 2 வாரங்களுக்குள் நிரூபிக்கத் தயாராக உள்ளதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
59 ஆண்டுகளாக நீடித்து வந்த திராவிட கட்சிகளின் அரசியல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இந்த வெற்றி, தமிழக அரசியலில் புதிய யுகத்தைத் தொடங்கியதாகக் கருதப்படுகிறது.
2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தவெக கட்சி, தனது முதல் சட்டசபைத் தேர்தலிலேயே 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமாக 34.92% வாக்குகளை பெற்று, மாநிலத்தின் மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.
மற்ற கட்சிகளின் நிலவரப்படி, திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி 74 இடங்களையும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி 53 இடங்களையும் பெற்றுள்ளன.
இந்த சாதனையின் மூலம், எம்.ஜி. ராமச்சந்திரன், என்.டி. ராமராவ், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் பாதையில், அரசியல் களத்தில் விரைவாக எழுந்த தலைவர்களின் வரிசையில் விஜய் இணைந்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் புதிய ஆட்சிக்கான அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் கூட்டணி சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக