BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

கம்பஹாவில் பயங்கரம்: வயது நபர் கழுத்தறுத்துக்கொலை - மனநோயாளி கைது!

கம்பஹாவில் பயங்கரம்: வயது நபர் கழுத்தறுத்துக்கொலை - மனநோயாளி கைது!

கம்பஹா - கஸ்பே இலுக்கஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த ஏப்ரல் 3-ஆம் திகதி நள்ளிரவு பாரிய கொலைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சாந்த ஜயரிசன் சில்வா (51 வயது) என்ற நபர் கத்தியால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் வீட்டிற்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜயரிசன் சில்வாவின் கழுத்துப் பகுதியில் பலமாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


கொலையைச் செய்த பின்னர் சந்தேகநபர் அருகில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்திருந்த நிலையில், பொலிஸார் அவரை அவர் பயன்படுத்திய கத்தியுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் ஒரு மனநோயாளி என்பதும், அதற்காக நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வருபவர் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"