BREAKING
கோடைக்காலத்தில் பசலைக்கீரை ஏன் அவசியம்? உடல்நலத்திற்கு தரும் முக்கிய நன்மைகள் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்: புகைப்படங்கள் வைரல் குஷ்புவின் மகள் திருமணத்தில் புடவையில் ஜொலித்த த்ரிஷா: புகைப்படங்கள் இணையத்தில் வைரல் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் பரபரப்பு: போட்டியாளரின் கருத்துக்கு நடுவர் கடும் எதிர்ப்பு அஸ்வெசும திட்டத்தின் கீழ் ஜூன் மாத முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வரவு கோடைக்காலத்தில் பசலைக்கீரை ஏன் அவசியம்? உடல்நலத்திற்கு தரும் முக்கிய நன்மைகள் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்: புகைப்படங்கள் வைரல் குஷ்புவின் மகள் திருமணத்தில் புடவையில் ஜொலித்த த்ரிஷா: புகைப்படங்கள் இணையத்தில் வைரல் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் பரபரப்பு: போட்டியாளரின் கருத்துக்கு நடுவர் கடும் எதிர்ப்பு அஸ்வெசும திட்டத்தின் கீழ் ஜூன் மாத முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வரவு

எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியா இருக்கீங்களா? நாட்களில் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவு முறைகள்

எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியா இருக்கீங்களா? நாட்களில் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவு முறைகள்

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காமல் மிகவும் ஒல்லியாகவே இருப்பார்கள். இதற்கான முக்கிய காரணம் சத்துள்ள உணவுகள் குறைவாக உட்கொள்வது மற்றும் தவறான வாழ்க்கை முறை ஆகும். சரியான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றினால், குறுகிய காலத்திலேயே உடல் எடையை இயற்கையாக அதிகரிக்க முடியும்.

உடல் எடை அதிகரிக்க, தினசரி உணவில் புரதம், நல்ல கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக மீன், சிக்கன், உருளைக்கிழங்கு, சாதம் போன்றவை மதிய உணவில் அவசியம் இருக்க வேண்டும். தேவையில்லாத ஜங்க் உணவுகளை தவிர்ப்பதும் முக்கியம்.

காலை உணவில் பால், சீஸ், தயிர், பட்டர் போன்ற பால்வர்க்கங்களுடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு தேவையான சக்தியை வழங்கும். இதனுடன் வாழைப்பழம் போன்ற பழங்களையும் சேர்த்துக்கொள்வது நல்லது.

மேலும், உலர் பழங்கள் (Dry fruits) அதிக கலோரி மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொண்டவை என்பதால், அவற்றை தினசரி உணவில் சேர்ப்பது உடல் எடை அதிகரிக்க உதவும். வெண்ணெய் போன்ற அதிக கலோரி உணவுகளையும் அளவோடு பயன்படுத்தலாம்.

வாழைப்பழம், சப்போட்டா, பப்பாளி, சீத்தாப்பழம், கொய்யா, அத்திப்பழம் போன்ற பழங்கள் உடல் எடை அதிகரிக்க உதவும் முக்கியமான உணவுகளாகும். அதேபோல் உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சோளம், கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் போன்றவை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

இந்த உணவு முறைகளுடன் சேர்த்து, போதிய தூக்கம், தினமும் குறைந்தது 15 நிமிடம் நடைப்பயிற்சி மற்றும் எளிய உடற்பயிற்சி செய்வது அவசியம். இவ்வாறு சீரான வாழ்க்கை முறையை பின்பற்றினால், உடல் எடை அதிகரித்து ஆரோக்கியமான தோற்றத்தை பெறலாம்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"