BREAKING
குடும்பங்களுக்கான கடன்கள் 25.4 சதவீதத்தால் அதிகரிப்பு ; மத்திய வங்கியின் அறிவிப்பு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனும் யுவதியும் கைது இளம் சீனப் பிரஜை அதிரடி கைது ; சோதனையில் சிக்கிய பொருள் இளைஞரின் உயிரை பறித்த லொறி ; பொலிஸாரின் பிடியில் ஒருவர் SLS தரச்சான்று இல்லாத நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் பறிமுதல் குடும்பங்களுக்கான கடன்கள் 25.4 சதவீதத்தால் அதிகரிப்பு ; மத்திய வங்கியின் அறிவிப்பு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனும் யுவதியும் கைது இளம் சீனப் பிரஜை அதிரடி கைது ; சோதனையில் சிக்கிய பொருள் இளைஞரின் உயிரை பறித்த லொறி ; பொலிஸாரின் பிடியில் ஒருவர் SLS தரச்சான்று இல்லாத நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் பறிமுதல்

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: வயது யுவதியுடன் தலைமறைவான வங்கி பெண் உத்தியோகத்தர்!

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: வயது யுவதியுடன் தலைமறைவான வங்கி பெண் உத்தியோகத்தர்!

யாழ்ப்பாணத்தில் தனியார் வங்கி ஒன்றில் உத்தியோகத்தராகப் பணியாற்றும் 35 வயதுடைய பெண் ஒருவர், பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை செய்த 21 வயது யுவதியுடன் தலைமறைவாகியுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான இப்பெண், கடந்த சில காலமாக அந்த யுவதியுடன் நட்பாகப் பழகி வந்துள்ளார். இந்நிலையில், தனது கணவருக்கு வட்ஸ்அப் (WhatsApp) மூலம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ள அவர், தனக்கு ஆண்களுடன் சேர்ந்து வாழப் பிடிக்கவில்லை என்றும், பிள்ளைகளைப் பராமரிக்கச் சிரமமாக இருந்தால் தனது தாயிடம் ஒப்படைக்குமாறும், தன்னைத் தேட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


பாதிக்கப்பட்ட கணவர் இது குறித்துத் தனியார் வங்கியில் விசாரித்தபோது, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி அந்தப் பெண் தென்பகுதி வங்கி ஒன்றிற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. திருமணமான ஆரம்ப காலத்திலிருந்தே தனது மனைவிக்கு இளம் பெண்கள் மீது நாட்டம் இருந்ததாகவும், இதனை மறைத்துத் தனது பெற்றோர்கள் ஏமாற்றித் திருமணம் செய்து வைத்துள்ளதாகவும் கணவர் குற்றம் சுமத்தியுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் வாகன சாரதியாகப் பணிபுரியும் கணவர், தற்போது இரண்டு பிள்ளைகளையும் கவனிப்பதற்காகத் தனது வேலையை விட்டுவிட்டு வீட்டில் தங்கியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"