BREAKING
மிக நீளமான சிறுநீரக கல்லை அகற்றி சாதனை படைத்த திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் புதிதாகப் பொறுப்பேற்ற 52 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு மட்டக்களப்பு கொம்மாதுறையில் விபத்து: ஒருவர் படுகாயம் கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவேந்தல் நிகழ்வு! யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி இன்று ஆரம்பம் மிக நீளமான சிறுநீரக கல்லை அகற்றி சாதனை படைத்த திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் புதிதாகப் பொறுப்பேற்ற 52 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு மட்டக்களப்பு கொம்மாதுறையில் விபத்து: ஒருவர் படுகாயம் கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவேந்தல் நிகழ்வு! யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி இன்று ஆரம்பம்

நாமலின் பிரித்தானிய பயணம் குறித்து ரணில் கேள்வி இரகசிய பேச்சு பேசுபொருள்

நாமலின் பிரித்தானிய பயணம் குறித்து ரணில் கேள்வி இரகசிய பேச்சு பேசுபொருள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் அவரது பிரித்தானிய பயணம் குறித்து கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் குரல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கருத்தரங்கு ஒன்று கடந்த வாரம் இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது இருவருக்கும் இடையில் இந்த உரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நிகழ்வின் போது நாமல் ராஜபக்ச அமர்வதற்குத் தயாரான போது, ரணில் விக்ரமசிங்க அவரை நோக்கி இங்கே அமருங்கள் எனக் கூறி தனது அருகிலிருந்த ஆசனத்தை காட்டியுள்ளார்.

ஆனால் அந்த ஆசனத்தில் ஏற்கனவே பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அமர்ந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து நாமல் ராஜபக்சவின் அண்மைய ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கு மேற்கொண்ட பயணம் குறித்து ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ச தனது பயண அனுபவங்களை அவரிடம் விளக்கியுள்ளார். இதன் போது ரணில் விக்ரமசிங்க நாமலின் காதில் இரகசியமாக ஏதோ ஒன்றை கூறியதாகவும், அதற்கு நாமல் புன்னகையுடன் பதிலளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இருவருக்கிடையிலான நெருக்கமான உரையாடல் அங்கிருந்த அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

கருத்தரங்கு நிறைவடைந்த பின்னர் ஊடகவியலாளர்கள் நாமல் ராஜபக்சவிடம் ரணில் விக்ரமசிங்க கூறிய இரகசியம் என்ன எனக் கேட்டபோது, அது ஒரு இரகசியம் என புன்னகையுடன் பதிலளித்து அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"