BREAKING
முகேஷ் அம்பானி வீட்டின் 11வது மாடியின் ரகசியம் – நம்பிக்கையும் ஆன்மீகமும் ஒரு உயர்ந்த தளம் சந்திரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள் – இன்று உங்கள் வாய்ப்புகள்! சிறகடிக்க ஆசை சீரியல்: சந்தோஷ செய்தி கொடுத்த மீனா, விஜயாவின் ஆத்திர நடவடிக்கை ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனை காக்க இத்தாலியின் புதுமையான திட்டம் – மீன்பிடி வலைகள் பயன்படுத்த முன்மொழிவு இலங்கையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு – ஒரே நாளில் 7000 ரூபாய் அதிகரிப்பு முகேஷ் அம்பானி வீட்டின் 11வது மாடியின் ரகசியம் – நம்பிக்கையும் ஆன்மீகமும் ஒரு உயர்ந்த தளம் சந்திரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள் – இன்று உங்கள் வாய்ப்புகள்! சிறகடிக்க ஆசை சீரியல்: சந்தோஷ செய்தி கொடுத்த மீனா, விஜயாவின் ஆத்திர நடவடிக்கை ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனை காக்க இத்தாலியின் புதுமையான திட்டம் – மீன்பிடி வலைகள் பயன்படுத்த முன்மொழிவு இலங்கையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு – ஒரே நாளில் 7000 ரூபாய் அதிகரிப்பு

யாரையும் காயப்படுத்தும் வாழ்க்கை வேண்டாம் நடிகை த்ரிஷாவின் பழைய பேட்டி மீண்டும் வைரல்

யாரையும் காயப்படுத்தும் வாழ்க்கை வேண்டாம் நடிகை த்ரிஷாவின் பழைய பேட்டி மீண்டும் வைரல்

நடிகை த்ரிஷா தனது திருமண வாழ்க்கை குறித்து முன்பு அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. அந்த மனுவில் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து ஏற்கனவே பல்வேறு கிசுகிசுக்கள் பரவி வந்த நிலையில், இந்த விவாகரத்து சர்ச்சையும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

மேலும், சமீபத்தில் கல்பாத்தி சுரேஷின் வீட்டில் நடைபெற்ற திருமண விழாவில் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒரே நிற ஆடையில் கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், 2016 ஆம் ஆண்டு த்ரிஷா அளித்த பழைய பேட்டி ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் திருமணம் குறித்து தனது எண்ணங்களை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

அதில் அவர் கூறியதாவது, “திருமணத்திற்கு முன்பு எனக்கு கணவராக வரப்போகும் நபர் தான் என் வாழ்க்கை துணை என நான் உணர வேண்டும். அவருடன் தான் வாழ்க்கையை முழுவதும் வாழப்போகிறேன் என்ற உறுதி இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னுக்கு விவாகரத்தில் எந்த நம்பிக்கையும் இல்லை என்றும், திருமணம் செய்வதற்கு முன் பலமுறை யோசித்துப் பிறகே முடிவு எடுப்பேன் என்றும் கூறியிருந்தார்.

“யாரையும் காயப்படுத்தும் வாழ்க்கையை நான் விரும்பவில்லை. மகிழ்ச்சியில்லாத திருமண வாழ்க்கையையும் விரும்பவில்லை. என்னைச் சுற்றியுள்ள பலர் தவறான காரணங்களுக்காக திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியின்றி வாழ்வதை நான் பார்த்திருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “திருமணம் இரண்டாவது விஷயம். முதலில் ஒருவரை உண்மையாக விரும்ப வேண்டும். அவரை காதலித்த பிறகே திருமணம் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நான் நிச்சயம் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று நடிகை த்ரிஷா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் அதிகமாக பகிரப்பட்டு பேசப்பட்டு வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"