BREAKING
பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

காவல்துறை யதார்த்தத்தை உரக்கச் சொல்லும் 'தடயம்': சமுத்திரகனி - ஷிவதாவின் கிரைம் வெப் சீரிஸ் ஒரு பார்வை!

காவல்துறை யதார்த்தத்தை உரக்கச் சொல்லும் 'தடயம்': சமுத்திரகனி - ஷிவதாவின் கிரைம் வெப் சீரிஸ் ஒரு பார்வை!

ஆந்திரா - தமிழக எல்லைப் பகுதியில் நடக்கும் தொடர் கொலைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'தடயம்', காவல்துறை விசாரணையின் யதார்த்தமான கோணங்களை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. வேலையில் நாட்டம் இல்லாமல் இருக்கும் காவல் அதிகாரி சமுத்திரகனி மற்றும் புதிதாகப் பொறுப்பேற்கும் இன்ஸ்பெக்டர் ஷிவதா ஆகிய இருவரும் இணைந்து, புதுமணத் தம்பதிகளைக் குறிவைத்து நடக்கும் கொலைகளை எப்படித் துப்பறிந்து கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதையின் சாராம்சம். மொத்தம் 6 அத்தியாயங்களாகத் தலா 20 நிமிட கால அளவில் அமைந்துள்ள இந்த சீரிஸில், சமுத்திரகனியின் நுணுக்கமான துப்பறியும் காட்சிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடையிலான அதிகாரப் போட்டி தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.


நிஜக் கதையை அடிப்படையாகக் கொண்டதால், வில்லன்களின் பின்னணி மற்றும் ஆந்திர-தமிழக போலீசாருக்கு இடையிலான காட்சிகள் விறுவிறுப்பைத் தருகின்றன. சமுத்திரகனி மற்றும் ஷிவதா தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களில் சிறப்பாகப் பங்களித்துள்ளனர். இருப்பினும், வில்லன்களைக் கண்டறிந்த பிறகு கதை ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் சுற்றுவது திரைக்கதையில் ஒருவித சோர்வை ஏற்படுத்துகிறது. விறுவிறுப்பான 'எட்ஜ் ஆப் தி சீட்' திரில்லர் அனுபவம் முழுமையாக இல்லையென்றாலும், காவல்துறையின் உண்மையான உழைப்பையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் வெளிப்படுத்தியதற்காகவே இந்தத் தொடரைத் தாராளமாகப் பார்க்கலாம்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"