BREAKING
வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? – உடல்நலத்தை பாதுகாக்க முக்கிய அறிவுரை யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது – இரகசிய தகவலால் வெளிச்சத்துக்கு வந்த வியாபாரம் வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா? – 5 முக்கிய கேள்விகள் & பதில்கள் Vijay படத்திற்கு பெரிய அதிர்ச்சி: Jana Nayagan லீக் வழக்கில் எடிட்டர் கைது! 12 நாட்களில் ₹60 கோடி மட்டுமா? Love Insurance Kompany வசூல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது! வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? – உடல்நலத்தை பாதுகாக்க முக்கிய அறிவுரை யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது – இரகசிய தகவலால் வெளிச்சத்துக்கு வந்த வியாபாரம் வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா? – 5 முக்கிய கேள்விகள் & பதில்கள் Vijay படத்திற்கு பெரிய அதிர்ச்சி: Jana Nayagan லீக் வழக்கில் எடிட்டர் கைது! 12 நாட்களில் ₹60 கோடி மட்டுமா? Love Insurance Kompany வசூல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது!

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் இலங்கை உட்பட ஆசிய நாடுகளுக்கு எரிபொருள் மற்றும் உணவு விலை உயர்வு அபாயம்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் இலங்கை உட்பட ஆசிய நாடுகளுக்கு எரிபொருள் மற்றும் உணவு விலை உயர்வு அபாயம்

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் தாக்கத்தால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், சர்வதேச ரீதியில் உணவுப் பொருட்கள் மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரித்து மக்களின் வாழ்க்கைச் செலவு பாரிய அளவில் உயரக்கூடும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 16 கப்பல்கள் உட்பட பல படகுகளை அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான காணொளிக் காட்சிகளையும் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கொண்டு செல்லப்படும் மிக முக்கியமான எரிசக்தி கடல் வழித்தடமாக ஹோர்முஸ் நீரிணை கருதப்படுகிறது. இப்பகுதியில் ஈரான் தனது போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதாக கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் அமெரிக்கா இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் போர்க்கப்பல்களை வைத்திருந்தால் அவற்றை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி சபையின் புதிய ஆய்வறிக்கையில், இந்த நிலைமை குறிப்பாக ஆசிய நாடுகளையும் வறிய மக்களையும் மிகக் கடுமையாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28 ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 97 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய அளவில் மசகு எண்ணெயில் 38 சதவீதமும், எரிவாயுவில் 29 சதவீதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 19 சதவீதமும் இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன.

தற்போது இந்த கடல் வழித்தடம் முடங்கியுள்ளதால் பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிசக்தி விலைகள் அதிரடியாக அதிகரித்து வருகின்றன.

மேலும், சர்வதேச ரீதியில் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படும் உரங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே விநியோகிக்கப்படுகின்றன. இதனால் உர விநியோகம் பாதிக்கப்பட்டு உலகளாவிய உணவு உற்பத்தி குறையும் அபாயமும் உருவாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக அனுப்பப்படும் மொத்தப் பொருட்களில் 84 சதவீதம் ஆசிய நாடுகளையே சென்றடைவதால், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான பாரிய விலை உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"