BREAKING
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்! இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்!

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது இரகசிய தகவலால் வெளிச்சத்துக்கு வந்த வியாபாரம்

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது இரகசிய தகவலால் வெளிச்சத்துக்கு வந்த வியாபாரம்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அளவெட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இரு இளைஞர்கள் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்களின் உடைமைகளை சோதனை செய்த போது ஐஸ் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அந்த போதைப்பொருளை விற்பனை செய்த நபர் தொடர்பான தகவல் வெளிப்பட்டதையடுத்து மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்தும் சுமார் 2 கிராம் 380 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இவர்கள் தற்போது தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. போதைப்பொருள் வியாபாரம் தொடர்பான இந்த சம்பவம் யாழ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"