இலங்கையின் கடல் எல்லைக்குள் நிலவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலையில், நாடு ஒருபோதும் பக்கச்சார்பின்றி நடுநிலையான கொள்கையையே பின்பற்றி வருகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் Nalinda Jayatissa தெரிவித்துள்ளார்.
Department of Government Information Sri Lanka திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது இலங்கையின் பொறுப்பில் உயிரிழந்த 84 ஈரானியர்களின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், Iran அரசு இதுகுறித்து உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்தால் அவற்றை உரிய முறையில் ஒப்படைக்க இலங்கை அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 32 பேர் மற்றும் இரண்டாவது கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 206 கடற்படையினர் தற்போது Sri Lanka Navy மற்றும் வைத்தியசாலைகளின் நேரடி கண்காணிப்பில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மேலும் சர்வதேச கடல்சார் உடன்படிக்கைகளின்படி, இந்நபர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் வரை அவர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே பொறுப்பேற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு பொறுப்புள்ள நாடாக சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்பட்டு வருகிறோம் என்றும், இலங்கை கடல் எல்லையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான விவகாரங்களை அரசு மிகவும் கவனமாக கையாள்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக