BREAKING
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்! இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்!

செங்கல்பட்டில் கொசுவர்த்தி தீ விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டில் கொசுவர்த்தி தீ விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக மாவட்டம் செங்கல்பட்டியில் கொசுவர்த்தி சுருளால் ஏற்பட்ட தீ விபத்தில், குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த கன்னிவாக்கம் பகுதியில் வசிக்கும் பார்த்திபன் (33), அவரது மனைவி ஜெயசித்ரா (29) மற்றும் மகள் ஜெயஸ்ரீ வீட்டில் தங்கியிருந்தனர்.

இந்த பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக இருந்ததால், வீட்டிலிருந்து பணி முடிந்து வந்த பார்த்திபன், கொசுவர்த்தி சுருளை ஏற்றி வைத்துவிட்டு தூங்க சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின், கொசுவர்த்தி சுருள் அருகே இருந்த துணிகள் அல்லது வேறு பொருளில் விழுந்து தீப்பற்றியது. தீ வீடு முழுவதும் பரவ, அறை முழுவதும் நச்சுப்புகை காக்கும் வகையில் சூழ்ந்தது.

வீட்டில் இருந்த மூவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், வெளியே தப்பிக்க வழியில்லாமல் பார்த்திபன், அவரது மனைவி மற்றும் மகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

வீட்டின் அருகிலிருந்த அக்கம்பக்கத்தினர், வீடு முழுவதும் புகை மூட்டமாக இருப்பதை பார்த்து, உடனடியாக தீயணைப்பு நிலையத்தைத் தொடர்பு கொண்டனர். விரைந்து வந்த தீயணைப்பு படை வீட்டிற்குள் சென்று தீயை அணைத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"