ஜனாதிபதியின் பணிப்புறையாக நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று முன் தினம் (07.03.2026) நடைப்பெற்ற சோதனை நடவடிக்கைகளில் சுமார் 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 9 பேர், சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைகளுக்காக 11 பேர் கைதானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தம் 989 சோதனைகள் நடத்தப்பட்டு, 13 பேர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டனர்.
போதைப்பொருள் கைப்பற்றல் விவரங்கள்
சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸார் கைப்பற்றிய போதைப்பொருள் அளவுகள் பின்வருமாறு:
ஹெரோயின்: 403 கிராம்
ஐஸ்: 922 கிராம்
கஞ்சா: 1 கிலோ 3 கிராம்
கஞ்சா செடிகள்: 1,189
குஷ் ரக போதைப்பொருள்: 435 கிராம்
ஹஷீஷ் ரக போதைப்பொருள்: 15 கிராம்
போதை மாத்திரைகள்: 1,086
மதனமோதகம்: 2 கிலோ 155 கிராம்
மாவா போதைப்பொருள்: 2 கிலோ 377 கிராம்
இந்த நடவடிக்கை நாட்டில் போதைப்பொருள் தடுப்பு முயற்சிகளை மேலும் தீவிரமாகக் கொண்டு செல்லும் என்பதற்கான ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக