BREAKING
வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? – உடல்நலத்தை பாதுகாக்க முக்கிய அறிவுரை யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது – இரகசிய தகவலால் வெளிச்சத்துக்கு வந்த வியாபாரம் வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா? – 5 முக்கிய கேள்விகள் & பதில்கள் Vijay படத்திற்கு பெரிய அதிர்ச்சி: Jana Nayagan லீக் வழக்கில் எடிட்டர் கைது! 12 நாட்களில் ₹60 கோடி மட்டுமா? Love Insurance Kompany வசூல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது! வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? – உடல்நலத்தை பாதுகாக்க முக்கிய அறிவுரை யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது – இரகசிய தகவலால் வெளிச்சத்துக்கு வந்த வியாபாரம் வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா? – 5 முக்கிய கேள்விகள் & பதில்கள் Vijay படத்திற்கு பெரிய அதிர்ச்சி: Jana Nayagan லீக் வழக்கில் எடிட்டர் கைது! 12 நாட்களில் ₹60 கோடி மட்டுமா? Love Insurance Kompany வசூல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது!

வளைகுடா போரின் தாக்கம்: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை டொலரை கடந்தது

வளைகுடா போரின் தாக்கம்: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை டொலரை கடந்தது

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் வளைகுடா போரின் தாக்கம் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர் நாடுகள் தமது உற்பத்தி அளவைக் குறைத்துள்ள நிலையில், ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர் நடவடிக்கைகள் காரணமாக உலகின் முக்கிய கடல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான Strait of Hormuz முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலடியாக பிரதான எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களின் உற்பத்தியை குறைத்துள்ளதால் உலக சந்தையில் எண்ணெய் விலை வேகமாக உயர்ந்துள்ளது.

அதன்படி Brent crude oil வகை மசகு எண்ணெய் விலை சுமார் 18 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 108.68 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

அதேபோல் West Texas Intermediate crude oil வகை மசகு எண்ணெய் விலை சுமார் 20 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 108 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் விலை உயர்வு காரணமாக பல நாடுகளில் எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், அதன் தாக்கமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"