மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது. இப்போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள வீரேந்திர சேவாக், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 195 ரன்கள் இலக்கை இந்தியா துரத்தி வெற்றி பெற்றதைச் சுட்டிக்காட்டி, இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். வான்கடே மைதானம் இந்தியாவிற்குச் சாதகமான களம் என்றாலும், நாக்-அவுட் போட்டிகளில் "சாதகமான சூழல்" மட்டுமே வெற்றியைத் தந்துவிடாது என அவர் எச்சரித்துள்ளார். "பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் முழுமையான திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி சாத்தியம்; நாக்-அவுட் போட்டிகளில் எந்தவொரு சாக்குப்போக்கும் எடுபடாது" என அவர் வீரர்களை உஷார்படுத்தியுள்ளார்.
மறுபுறம், இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அடில் ரஷித் போன்ற சவாலான பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளதும் இந்தியாவிற்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பலமான அணிகளுக்கு எதிராக முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற குறையைத் தீர்த்து, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக