BREAKING
யாழ். பலாலியில் தொடரும் போராட்டம் ; போராட்ட களத்தில் மயங்கி சரிந்த பெண் எரிபொருள் விலையை அதிகரிக்கக் கோரும் தனியார் நிறுவனங்கள் ; ஒப்பந்தங்களைத் திருத்த ஜனாதிபதி தீர்மானம் பாகிஸ்தானின் அதிரடி துடுப்பாட்டம் ; 82 ஓட்டங்களால் இலங்கை தோல்வி திடீரென மாறும் வானிலை ; வங்கக்கடலில் உருவாகும் புதிய அச்சுறுத்தல் நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு யாழ். பலாலியில் தொடரும் போராட்டம் ; போராட்ட களத்தில் மயங்கி சரிந்த பெண் எரிபொருள் விலையை அதிகரிக்கக் கோரும் தனியார் நிறுவனங்கள் ; ஒப்பந்தங்களைத் திருத்த ஜனாதிபதி தீர்மானம் பாகிஸ்தானின் அதிரடி துடுப்பாட்டம் ; 82 ஓட்டங்களால் இலங்கை தோல்வி திடீரென மாறும் வானிலை ; வங்கக்கடலில் உருவாகும் புதிய அச்சுறுத்தல் நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு

தேசிய மின் கட்டமைப்பில் கோளாறு: நாட்டின் பல பகுதிகளில் மின்தடை!

தேசிய மின் கட்டமைப்பில் கோளாறு: நாட்டின் பல பகுதிகளில் மின்தடை!
புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகப் பாதைகளில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பக் கோளாறினால் தேசிய மின் கட்டமைப்புத் தொகுதியின் அதிர்வெண்ணில் (Frequency) ஏற்பட்ட மாற்றம் காரணமாக, களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் நீராவி விசையாழி (Steam Turbine) செயலிழந்து கட்டமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. இதன் விளைவாகத் தேசிய மின் கட்டமைப்புத் தொகுதிக்குக் கிடைக்க வேண்டிய 55 மெகாவாட் மின்சாரக் கொள்ளளவு இழக்கப்பட்டதால் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மின்சார சபை பொறியியலாளர்களின் துரித நடவடிக்கையினால் சில நிமிடங்களிலேயே நிலைமை சீர்செய்யப்பட்டு, மின் விநியோகம் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாக மின்சார சபை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"