BREAKING
குடும்பங்களுக்கான கடன்கள் 25.4 சதவீதத்தால் அதிகரிப்பு ; மத்திய வங்கியின் அறிவிப்பு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனும் யுவதியும் கைது இளம் சீனப் பிரஜை அதிரடி கைது ; சோதனையில் சிக்கிய பொருள் இளைஞரின் உயிரை பறித்த லொறி ; பொலிஸாரின் பிடியில் ஒருவர் SLS தரச்சான்று இல்லாத நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் பறிமுதல் குடும்பங்களுக்கான கடன்கள் 25.4 சதவீதத்தால் அதிகரிப்பு ; மத்திய வங்கியின் அறிவிப்பு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனும் யுவதியும் கைது இளம் சீனப் பிரஜை அதிரடி கைது ; சோதனையில் சிக்கிய பொருள் இளைஞரின் உயிரை பறித்த லொறி ; பொலிஸாரின் பிடியில் ஒருவர் SLS தரச்சான்று இல்லாத நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் பறிமுதல்

கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலையில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை: காதலன் தலைமறைவு!

கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலையில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை: காதலன் தலைமறைவு!

காலி, கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்த 24 வயதான கிம்ஹானி பெரேரா என்ற இளம்பெண், சக ஊழியரால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண்ணுக்கும், அதே தொழிற்சாலையில் உதவியாளராகப் பணிபுரிந்த பதுளையைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக நிலவி வந்த காதல் தொடர்பில் ஏற்பட்ட முறிவே இக்கொலைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்தப் பெண் சந்தேக நபருடன் பேசுவதைத் தவிர்த்து வந்த நிலையில், நேற்று காலை ஆடை வைக்கும் அறைக்குச் சென்றபோது அங்கு மறைந்திருந்த சந்தேக நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.


படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொலையாளி தனது உடைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார். சம்பவ இடத்திலிருந்து இரத்தக் கறையுடன் கூடிய கத்தியைப் பொலிஸார் மீட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைது செய்ய கஹதுடுவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"