BREAKING
இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

மத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் இரத்து!

மத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் இரத்து!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் வான்பரப்பு கட்டுப்பாடுகள் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இன்று (05) ரியாத் மற்றும் துபாய்க்கான தனது விமான சேவைகளை இரத்து செய்துள்ளது. இதன்படி, கொழும்பிலிருந்து துபாய் செல்லவிருந்த UL 225, அங்கிருந்து திரும்பவிருந்த UL 226 மற்றும் ரியாத் நோக்கிய UL 265, UL 266 ஆகிய வானூர்தி சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் தனது வான்வெளியைத் தற்காலிகமாகத் திறந்திருந்த போதிலும், நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் மேலதிக விபரங்களுக்கு 1979 என்ற 24 மணிநேரத் தொடர்பு மையத்தை அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தடைகளுக்கு மத்தியிலும் நேற்று துபாய்க்கு 4 விமானங்கள் இயக்கப்பட்டதோடு, இன்று அதிகாலை மஸ்கட்டிலிருந்து ஃபிட்ஸ் ஏர் மற்றும் ஸ்மார்ட் விங்ஸ் விமானங்கள் 133 பயணிகளுடன் கட்டுநாயக்கவை வந்தடைந்தன. மேலும், துபாயிலிருந்து எமிரேட்ஸ் மற்றும் ஃபிளை துபாய் விமானங்கள் இன்று மாலை வருகை தரத் திட்டமிடப்பட்டுள்ளன. ஒருபுறம் வான்வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலில் மூழ்கிய ஈரானியக் கப்பலில் இருந்து இதுவரை 84 உடல்கள் மீட்கப்பட்டுள்ளமை பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"