கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தத் தொடரில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியே சந்திக்காத அணியாகத் தென்னாப்பிரிக்கா வலம் வந்தாலும், நியூசிலாந்தை சாதாரணமாக எடைபோடக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார். லீக் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தியிருந்தாலும், நாக்-அவுட் போட்டிகளில் அவர்களின் வியூகம் மிகவும் நுணுக்கமாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, கவனக்குறைவாகச் செயல்பட்டால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்திவிடும் என்பதால் தென்னாப்பிரிக்கா நிதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாகிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி நூலிழையில் அரையிறுதிக்கு வந்திருந்தாலும், எதிரணியின் பலவீனங்களை ஆராய்ந்து விளையாடுவதில் அவர்கள் கெட்டிக்காரர்கள். இதுவரை இவ்விரு அணிகளும் மோதிய 19 டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா 12 வெற்றிகளைப் பெற்று புள்ளிவிவரப்படி முன்னிலையில் உள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய 5 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், "லா ஆஃப் ஆவரேஜ்" (Law of Average) அடிப்படையில் தென்னாப்பிரிக்காவுக்குச் சிக்கல் ஏற்படுமா அல்லது அவர்களின் வெற்றி நடை தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. புதன்கிழமை நடைபெறவுள்ள இந்தப் போட்டி கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள்
உலகக்கோப்பை : "நியூசிலாந்தை குறைவா மதிப்பிடாதீங்க!" - தென்னாப்பிரிக்காவுக்கு ரவி சாஸ்திரி கொடுத்த 'வார்னிங்'.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக