BREAKING
2026 உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 முதல்; பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி வெளியீடு; மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு சமரச கோரிக்கையை நிராகரித்தேன்; நீதிமன்றத்தில் நடந்த சந்திப்பு குறித்து அருட்தந்தை விளக்கம் 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவிய தாய்: காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி செயல் – இருவரும் விளக்கமறியலில் உண்ணாவிரதத்தில் தொடரும் சுரேஷ் சாலே: உயிர்த்த ஞாயிறு விசாரணையில் புதிய பரபரப்பு – அரசியல் வட்டாரங்களில் அதிர்வு 2026 உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 முதல்; பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி வெளியீடு; மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு சமரச கோரிக்கையை நிராகரித்தேன்; நீதிமன்றத்தில் நடந்த சந்திப்பு குறித்து அருட்தந்தை விளக்கம் 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவிய தாய்: காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி செயல் – இருவரும் விளக்கமறியலில் உண்ணாவிரதத்தில் தொடரும் சுரேஷ் சாலே: உயிர்த்த ஞாயிறு விசாரணையில் புதிய பரபரப்பு – அரசியல் வட்டாரங்களில் அதிர்வு

அரநாயக்கவில் பயங்கரம்: வீதியில் வைத்து பெண் செவிலியர் கத்தியால் குத்திக் கொலை - காதலன் அதிரடி கைது!

அரநாயக்கவில் பயங்கரம்: வீதியில் வைத்து பெண் செவிலியர் கத்தியால் குத்திக் கொலை - காதலன் அதிரடி கைது!

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற பெண் செவிலியர், கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பிள்ளையின் தாயான இவர், தனது கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றும் 33 வயதுடைய மனோஜ் பெத்தும் அகலங்க என்பவருடன் நீண்டகாலமாகத் தொடர்பில் இருந்துள்ளார். 


கடந்த முதலாம் திகதி பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. ஆத்திரமடைந்த சந்தேக நபர், வீதியில் சென்றுகொண்டிருந்த செவிலியரைத் துரத்திச் சென்று அவரது மார்பில் கத்தியால் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த அவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர். 


பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், சந்தேக நபர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், இவர்களுக்குள் நிலவிய தனிப்பட்ட தகராறே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்பதும் தெரியவந்தது. கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் அரநாயக்க பொலிஸார் கொலையாளியைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தினர். மாவனெல்லை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் கேகாலை மாவட்டத்தில் பெரும் சோகத்தையும், பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"