BREAKING
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

மினாப் நகரில் ஆரம்பப் பள்ளி மீது தாக்குதல்: பேர் உயிரிழப்பு என ஈரான் குற்றச்சாட்டு

மினாப் நகரில் ஆரம்பப் பள்ளி மீது தாக்குதல்: பேர் உயிரிழப்பு என ஈரான் குற்றச்சாட்டு

தெற்கு ஈரானின் மினாப் நகரில் செயல்பட்டு வந்த ஷஜரே தையேபா பெண்கள் ஆரம்பப் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் பள்ளி மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 165 பேர் உயிரிழந்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் உயிரிழந்த சிறுமிகளை புதைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகளுடன் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதைந்த நிலையில் குழந்தைகளின் உடல்கள் காணப்படுவதாக கூறப்படும் அந்தப் புகைப்படம் பலரின் மனதை உலுக்கியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் தரப்பு தங்களுக்கு இந்தச் சம்பவத்துடன் தொடர்பில்லை என தெரிவித்துள்ளது. அதேவேளை, பள்ளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதில்லை என அமெரிக்காவும் மறுப்பு வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை பகிர்ந்த ஈரான் வெளிவிவகாரத்துறை அமைச்சர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுவீச்சில் அப்பாவி சிறுமிகள் பலியாகியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். நிரபராத பொதுமக்கள் உயிரிழப்பது குறித்து சர்வதேச சமூகம் தலையிட்டு சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட விரிவான அறிக்கைகள் வெளியாகாத நிலையில், நிலைமை குறித்து பல்வேறு தரப்புகள் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"