BREAKING
தமிழர் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை இளம் தம்பதி உட்பட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை! குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி தமிழர் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை இளம் தம்பதி உட்பட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை! குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி

மத்திய கிழக்கு பதற்றம்: பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கு பதற்றம்: பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக விமான பயணங்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பல விசேட தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கைக்குள் இருந்து தொடர்புகொள்ள விரும்பும் பயணிகள் 1979 என்ற சிறப்பு இலக்கத்தின் ஊடாகவும், +94 11 777 1979 என்ற தொலைபேசி எண்ணின் ஊடாகவும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அழைப்புகளுக்கு வட்ஸ்அப் சேவையின் மூலம் மட்டுமே தகவல்களை பெற முடியும் என்றும், அதற்காக +94 74 444 1979 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்ட பயண முகவர் அல்லது நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தை அணுகி மேலதிக தகவல்களை பெறுமாறு பயணிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை மற்றும் சில நாடுகளில் விமான எல்லைகள் மூடப்பட்டுள்ளமை காரணமாக, நேற்று மத்திய கிழக்கிற்கான அனைத்து விமானங்களையும் இரத்து செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், பிராந்திய நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு – டுபாய், டுபாய் – கொழும்பு, கொழும்பு – குவைத், குவைத் – கொழும்பு, கொழும்பு – தோஹா, தோஹா – கொழும்பு, கொழும்பு – தம்மாம், தம்மாம் – கொழும்பு, கொழும்பு – ரியாத் மற்றும் ரியாத் – கொழும்பு ஆகிய பயணங்களுக்கு ஒதுக்கப்பட்ட பல விமான எண்களைக் கொண்ட சேவைகள் நேற்று இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"