BREAKING
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி வெளியீடு; மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு சமரச கோரிக்கையை நிராகரித்தேன்; நீதிமன்றத்தில் நடந்த சந்திப்பு குறித்து அருட்தந்தை விளக்கம் 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவிய தாய்: காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி செயல் – இருவரும் விளக்கமறியலில் உண்ணாவிரதத்தில் தொடரும் சுரேஷ் சாலே: உயிர்த்த ஞாயிறு விசாரணையில் புதிய பரபரப்பு – அரசியல் வட்டாரங்களில் அதிர்வு சுரேஷ் சாலேவின் விடுதலையை கோரி கொழும்பில் போராட்டம்: அரசியல்வாதிகள் ஆதரவு, பாதுகாப்பு தீவிரம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி வெளியீடு; மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு சமரச கோரிக்கையை நிராகரித்தேன்; நீதிமன்றத்தில் நடந்த சந்திப்பு குறித்து அருட்தந்தை விளக்கம் 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவிய தாய்: காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி செயல் – இருவரும் விளக்கமறியலில் உண்ணாவிரதத்தில் தொடரும் சுரேஷ் சாலே: உயிர்த்த ஞாயிறு விசாரணையில் புதிய பரபரப்பு – அரசியல் வட்டாரங்களில் அதிர்வு சுரேஷ் சாலேவின் விடுதலையை கோரி கொழும்பில் போராட்டம்: அரசியல்வாதிகள் ஆதரவு, பாதுகாப்பு தீவிரம்

தமிழ்நாட்டில் ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்

2025–26 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. மாணவர்கள் நீண்டநாள் தயாரிப்புக்குப் பின்னர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளனர்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 3,412 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளன.

பள்ளி மாணவர்கள் – 7,99,692 பேர்

தனித்தேர்வர்கள் – 27,783 பேர்

மொத்த தேர்வர்கள் – 8,27,475 பேர்

49,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு அறைகளில் கண்காணிப்பாளர்களாகவும், 4,900க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று தேர்வு எழுதவுள்ள 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் அறிவுறுத்தல்களையும் தெரிவித்துள்ளார்.

“அன்பு மாணவர்களே, பதற்றமின்றி தேர்வு மண்டபத்திற்கு வாருங்கள். மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் தேர்வு எழுதுங்கள். உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம்” என அவர் கூறியுள்ளார்.

மாணவர்கள் அமைதியான மனநிலையுடன் தேர்வை எதிர்கொண்டு சிறப்பாகத் தேர்ச்சி பெற கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"