BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

மன்னார் இளைஞர் சுட்டுக் கொலை: ஜனாதிபதியுடன் அவசரமாக பேசிய ரிஷாட் பதியுதீன்

மன்னார் இளைஞர் சுட்டுக் கொலை: ஜனாதிபதியுடன் அவசரமாக பேசிய ரிஷாட் பதியுதீன்

கொழும்பு ஜிந்துப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மன்னார் வெள்ளிமலையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் சஹ்ரீ உயிரிழந்த சம்பவத்தின் பாரதூரத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவசரமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (16.02.2026) தொலைபேசி மூலம் ஜனாதிபதியை தொடர்பு கொண்ட ரிஷாட் பதியுதீன், அப்பாவி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குறிவைத்து சுடப்படுவது சிவில் சமூகத்தின் அன்றாட வாழ்க்கையை அச்சுறுத்தி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். சட்டவிரோத ஆயுதக் கும்பல்கள் சுதந்திரமாக செயல்படுவது மக்கள் மத்தியில் பெரும் பயத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஜீவனோபாயத்திற்காக பணிபுரிந்துவரும் இளைஞர், விடுமுறைக்காக வீடு திரும்புவதற்கு முன் சலூனுக்கு சென்றிருந்தபோது இந்த துப்பாக்கிச்சூட்டில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பாவி மக்களுக்கு விழுந்த பாரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்தக் கொலைக்குப் பின்னால் உள்ளவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த பாதுகாப்புத் துறைக்கு தீவிர அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், பாதாளக் குழுக்களை ஒழிப்பதிலும், போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதிலும் தீவிரமாக செயல்படும் அரசாங்கம், அப்பாவி மக்களின் உயிர் பாதுகாப்பிலும் சம அளவு அக்கறை செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"