BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

இந்தியாபாகிஸ்தான் போட்டி சுமுகமாக நடைபெற ஜனாதிபதி அநுரகுமாரின் இராஜதந்திர முன்னெடுப்பு பாகிஸ்தான் பாராட்டு

இந்தியாபாகிஸ்தான் போட்டி சுமுகமாக நடைபெற ஜனாதிபதி அநுரகுமாரின் இராஜதந்திர முன்னெடுப்பு பாகிஸ்தான் பாராட்டு

2026ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் சுமுகமாக நடைபெறுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொண்ட இராஜதந்திர முயற்சிகளே காரணம் என பாகிஸ்தான் அரசு பாராட்டுத் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு அமைச்சர் சையத் மொஹ்சின் ரஸா நக்வி, நேற்று (16) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்தபோது இதனை குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது தொடர்பாக பாகிஸ்தான் ஆரம்பத்தில் தயக்கம் காட்டியதாகவும், பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாகிஸ்தான் பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதன் பின்னரே அந்த நிலைப்பாடு மாறியதாகவும் அமைச்சர் நக்வி தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதி பேசிவிட்டார், இனி எந்தப் பிரச்சினையும் இல்லை; நாம் விளையாட வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் என்னிடம் கூறினார். உங்களால் தான் இந்தப் போட்டி சாத்தியமானது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் என சுமார் 200 கோடிக்கும் அதிகமான மக்களை இந்தப் போட்டி மகிழ்வித்துள்ளது. நீங்கள்தான் இந்த நிகழ்வின் உண்மையான நாயகன்” என ஜனாதிபதியைப் பாராட்டினார்.

இச்சந்திப்பில் கிரிக்கெட்டைக் கடந்து முதலீடு, சுற்றுலா மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாகிஸ்தான் அணியின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். அதேவேளை, ‘டித்வா’ சூறாவளி போன்ற இக்கட்டான காலங்களில் இலங்கை மக்களுக்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவிற்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"