BREAKING
மிக நீளமான சிறுநீரக கல்லை அகற்றி சாதனை படைத்த திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் புதிதாகப் பொறுப்பேற்ற 52 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு மட்டக்களப்பு கொம்மாதுறையில் விபத்து: ஒருவர் படுகாயம் கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவேந்தல் நிகழ்வு! யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி இன்று ஆரம்பம் மிக நீளமான சிறுநீரக கல்லை அகற்றி சாதனை படைத்த திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் புதிதாகப் பொறுப்பேற்ற 52 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு மட்டக்களப்பு கொம்மாதுறையில் விபத்து: ஒருவர் படுகாயம் கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவேந்தல் நிகழ்வு! யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி இன்று ஆரம்பம்

செயற்பாட்டு அரசியலிலிருந்து ஒதுங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

செயற்பாட்டு அரசியலிலிருந்து ஒதுங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பாட்டு அரசியலிலிருந்து முழுமையாக ஒதுங்கியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், தற்போது தாம் எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிப்பதில்லை என்றும், அரசியல் நடவடிக்கைகளில் நேரடியாக பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும், நாட்டுக்கு நன்மை செய்யும் செயற்பாடுகள் அல்லது நிகழ்வுகள் இடம்பெறும்போது அவற்றில் கலந்து கொள்வதாகவும் அவர் கூறினார்.

அரகலயின் பின்னர் அரசியல் ரீதியாக மைத்திரிபால சிறிசேன ஓரங்கட்டப்பட்ட நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் அவரது மகன் போட்டியிட்டிருந்தாலும் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் இந்தத் திடீர் முடிவு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளதுடன், அவரது நீண்ட அரசியல் பயணத்திற்கு ஒரு இடைவேளை அல்லது முடிவாக இது கருதப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"