நோர்வுட், வென்ச்சர் மேல் பிரிவு பகுதியில், நோர்வுட் திசையிலிருந்து வென்ச்சர் 50 ஏக்கர் பகுதியை நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனத்தின் பின்பகுதியில் பயணித்த சிறுமியொருவர் அவ்வாகனத்திலிருந்து கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
நேற்று (25) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், படுகாயமடைந்த சிறுமி டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக