BREAKING
தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் அம்பலமான விடயம் ; தப்பியோடிய சந்தேகநபர்கள் அனோஜன் மரண தண்டனை விவகாரம் ; மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி பூரண ஆதரவு மட்டகளப்பில் கடற்கொள்ளையைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை ; அமைச்சர் சந்திரசேகர் மின்சார சபை ஊழியரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர் அதிரடி கைது அனோஜன் விவகாரம் ; இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்கத் தூதரக அதிகாரியை சந்தித்த தமிழ் அரசியல் தலைமைகள் தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் அம்பலமான விடயம் ; தப்பியோடிய சந்தேகநபர்கள் அனோஜன் மரண தண்டனை விவகாரம் ; மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி பூரண ஆதரவு மட்டகளப்பில் கடற்கொள்ளையைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை ; அமைச்சர் சந்திரசேகர் மின்சார சபை ஊழியரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர் அதிரடி கைது அனோஜன் விவகாரம் ; இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்கத் தூதரக அதிகாரியை சந்தித்த தமிழ் அரசியல் தலைமைகள்

வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் உடல் மாற்றங்கள்

வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் உடல் மாற்றங்கள்

வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும் ஒரு எளிய பழக்கமாக கருதப்படுகிறது. குறிப்பாக, காலையில் எழுந்தவுடன் அருந்தும் பானம் நாள் முழுவதும் உடலின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், காலை நேரத்தில் சுடு தண்ணீர் பருகுவது உடலில் பல்வேறு நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

காலை வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதால் செரிமான அமைப்பு தூண்டப்பட்டு, உடலில் தேங்கி இருக்கும் நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. இதன் மூலம் குடல் இயக்கம் சீராகி, மலச்சிக்கல் மற்றும் அஜீரணக் கோளாறுகள் குறைவடைகின்றன. வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளும் தவிர்க்கப்படுகின்றன.

மேலும், சுடு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறையை அதிகரிப்பதால், கொழுப்பு கரைய உதவுகிறது. இதன் காரணமாக உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கவும் இது துணைபுரிகிறது. எளிதாகவும் சிரமமில்லாமலும் மலம் கழிக்க உதவுவதால், குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

சுடு தண்ணீர் ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, உடலில் ஆக்ஸிஜன் வினியோகத்தை மேம்படுத்துகிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகி, உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. காலை நேரத்தில் உடலை இயற்கையாக சூடேற்றவும் இது உதவியாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி, தசை பிடிப்புகள், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை குறைக்கவும், மன அழுத்தத்தை தணிக்கவும் சுடு தண்ணீர் உதவுகிறது. நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதன் விளைவாக நாள் முழுவதும் அதிக ஆற்றலுடன் செயல்பட முடிகிறது.

வெறும் வெதுவெதுப்பான தண்ணீரை மட்டும் பருக முடியாதவர்கள், அதில் சிறிதளவு தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். அதேபோல், சீரகம் கலந்து வெதுவெதுப்பான தண்ணீர் பருகுவதும் உடலுக்கு கூடுதல் நன்மைகளை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"