BREAKING
6 மாத குழந்தையை கவ்வி இழுத்துச் சென்ற நாய் ; உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை யாழ்.கீரிமலையில் 300 டிப்பர் கழிவுகள் ; கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம் குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் அனோஜனை மீட்க அரசு முழு அளவில் செயற்படும் - பிமல் இலங்கை மற்றும் சவூதி இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை 6 மாத குழந்தையை கவ்வி இழுத்துச் சென்ற நாய் ; உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை யாழ்.கீரிமலையில் 300 டிப்பர் கழிவுகள் ; கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம் குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் அனோஜனை மீட்க அரசு முழு அளவில் செயற்படும் - பிமல் இலங்கை மற்றும் சவூதி இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

உதயநிதி ஸ்டாலின் கைது; தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் பல இடங்களில் பரபரப்பு

உதயநிதி ஸ்டாலின் கைது; தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் பல இடங்களில் பரபரப்பு

திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவேரி விவகாரம் தொடர்பாக தவெக அரசை கண்டித்து நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

இதன்போது நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தஞ்சாவூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தில் வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்கிய திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது இல்லத்தின் முன்பு திரண்டனர். எனினும், காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவருடன் கே.என். நேரு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் சென்றுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தேனியில் போராட்டம் நடத்திய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டதாகவும், மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது முதலமைச்சர் விஜய்யின் உருவபொம்மையை திமுகவினர் எரித்ததாகவும், தவெக கொடிகள் அகற்றப்பட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"