BREAKING
உதயநிதி ஸ்டாலின் கைது; தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் – பல இடங்களில் பரபரப்பு யோசித ராஜபக்சவின் வெளிநாட்டு பயண கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு 18 வயதில் கல்லூரி பேராசிரியரான அமெரிக்க இளைஞர்; கின்னஸ் உலக சாதனை படைத்து அசத்தல் மேர்வின் சில்வா வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டதாக வெளியான தகவலை நடிகை ரிது ஆகர்ஷா மறுப்பு தமிழ்நாட்டில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்; வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் உதயநிதி ஸ்டாலின் கைது; தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் – பல இடங்களில் பரபரப்பு யோசித ராஜபக்சவின் வெளிநாட்டு பயண கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு 18 வயதில் கல்லூரி பேராசிரியரான அமெரிக்க இளைஞர்; கின்னஸ் உலக சாதனை படைத்து அசத்தல் மேர்வின் சில்வா வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டதாக வெளியான தகவலை நடிகை ரிது ஆகர்ஷா மறுப்பு தமிழ்நாட்டில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்; வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

நாட்டின் பல பகுதிகளில் மரக்கறி விலைகளில் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் மரக்கறி விலைகளில் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் உள்ள சந்தைகளில் மரக்கறிகளின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் விலைப்பட்டியலுக்கு அமைய, பிராந்தியங்களுக்கு இடையே மரக்கறி விலைகளில் கணிசமான வேறுபாடுகள் பதிவாகியுள்ளன.

அதன்படி, நுவரெலியாவில் கோவா ஒரு கிலோகிராம் 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வவுனியாவில் அது 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கரட் ஒரு கிலோகிராம் நுவரெலியாவில் 340 ரூபாய்க்கும், வவுனியாவில் 380 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பீட்ரூட் ஒரு கிலோகிராம் நுவரெலியாவில் 280 ரூபாய்க்கும், வவுனியாவில் 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சந்தைத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

அண்மைக் காலமாக அதிக கேள்வி நிலவி வரும் கறிமிளகாய், வவுனியாவில் ஒரு கிலோகிராம் 850 ரூபாய்க்கும், நுவரெலியாவில் 750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குடை மிளகாய் வகைகளுக்கான கேள்வி தொடர்ச்சியாக அதிகரித்துள்ள நிலையில், நுவரெலியாவில் சிவப்பு குடைமிளகாய் ஒரு கிலோகிராம் 4,100 ரூபாய்க்கும், மஞ்சள் குடைமிளகாய் ஒரு கிலோகிராம் 4,100 ரூபாய்க்கும், பச்சை குடைமிளகாய் ஒரு கிலோகிராம் 1,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, வவுனியாவில் குடைமிளகாய் ஒரு கிலோகிராம் 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், லீக்ஸ் ஒரு கிலோகிராம் நுவரெலியாவில் 300 ரூபாய்க்கும், வவுனியாவில் 380 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் வவுனியாவில் 375 ரூபாய்க்கும், நுவரெலியாவில் 370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"