அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இடம்பெற்ற இந்தக் கைது நடவடிக்கையின்போது, சந்தேகநபரிடமிருந்து 2,320 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை குடி பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், கடந்த காலங்களில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதான சந்தேகநபரின் உதவியாளர்களாகச் செயற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்தும் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சாய்ந்தமருது பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக