BREAKING
ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம் ; தம்பதியருக்கு எதிராக விசாரணை நடுவானில் இயந்திரக் கோளாறு ; கொழும்பு வந்த வியட்ஜெட் விமானம் சென்னையில் அவசர தரையிறக்கம் யாழில் பிரபல வெதுப்பகத்திற்கு சீல் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தமிழர் பகுதியில் கடத்தி கொல்லப்பட்ட இரு பெண்கள் ; 18 வருடங்களின் பின்னர் சிக்கிய கடற்படை அதிகாரிகள் ஈஸ்டர் தாக்குதல்கள் இறுதி தீர்ப்பு ; குற்றவாளிகளுக்கு 220 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைக்கான விபரங்கள் வெளியானது ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம் ; தம்பதியருக்கு எதிராக விசாரணை நடுவானில் இயந்திரக் கோளாறு ; கொழும்பு வந்த வியட்ஜெட் விமானம் சென்னையில் அவசர தரையிறக்கம் யாழில் பிரபல வெதுப்பகத்திற்கு சீல் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தமிழர் பகுதியில் கடத்தி கொல்லப்பட்ட இரு பெண்கள் ; 18 வருடங்களின் பின்னர் சிக்கிய கடற்படை அதிகாரிகள் ஈஸ்டர் தாக்குதல்கள் இறுதி தீர்ப்பு ; குற்றவாளிகளுக்கு 220 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைக்கான விபரங்கள் வெளியானது

"இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் வது சுதந்திர தின விழா!

"இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் வது சுதந்திர தின விழா!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினக் கொண்டாட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். "இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" (Let's Build Sri Lanka) என்ற கருப்பொருளின் கீழ் இம்முறை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்படப் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர். சுமார் 3,500-க்கும் மேற்பட்ட முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் கௌரவ அணிவகுப்பு நடைபெறுகிறது. விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் தேசியக் கொடியைச் சுமந்தபடி வானில் சாகசங்களில் ஈடுபட்டுள்ளன.

ஜனாதிபதி தனது உரையில், "இலங்கை கடந்த காலங்களில் பல பொன்னான வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்தாலும், இம்முறை நாட்டைச் சரியான திசையில் கொண்டு செல்லவும், பொருளாதார ரீதியாக வலுவான நாடாக மாற்றவும் நாம் உறுதியாக உள்ளோம்" எனக் குறிப்பிட்டார். அத்துடன், அனைத்து இன மக்களும் இணைந்து இந்த தேசத்தைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.


 சுமார் 2,000 விசேட விருந்தினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் விழாவில் பங்கேற்றுள்ளனர். 2025ஆம் ஆண்டின் பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு போன்ற சாதகமான சூழலில் இந்தச் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. கொழும்பில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"