திருகோணமலை, ஓர்ஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தின் 22ஆவது படைப்பிரிவு முகாமின் களஞ்சியசாலையொன்றில் இன்று (21) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருகோணமலை மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது குறித்த களஞ்சியசாலை முற்றாகத் தீக்கிரையாகி சேதமாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக