கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு கல்லடி, கல்முனை மற்றும் ஏறாவூர் ஆகிய பகுதிகளில் ஒரு மாத காலத்திற்குள் மூன்று பெண்கள் காணாமல் போயுள்ள சம்பவம் பிரதேச ம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன பெண்களைக் கண்டுபிடிக்கவும், சம்பவங்களின் பின்னணியைக் கண்டறியவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காணாமல் போன மூவரையும் விரைவாகக் கண்டுபிடிக்கவும், ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணியையும் முழுமையாக விசாரிக்கவும் பொலிஸார் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை திருகோணமலை - மூதுரைச் சேர்ந்த 19 வயதான அஜி மற்றும் அப்பிஷா எனும் யுவதிகளை காணவில்லை என்பதுடன் அக்கராயன்குளம் கிளிநொச்சியியை சேர்ந்த 18 வயதுடைய சுமன் அகஷியா எனும் யுவதியையும் காணவில்லை என உறவினர்கள் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக