BREAKING
திருகோணமலை இராணுவ களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ 13 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை இன்றும் குறைந்த தங்கம் விலை; இரட்டிப்பு மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்! கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி எரிபொருள் களஞ்சிய முனையத்தில் டீசல் கசிவு; வாளிகள் கேன்களுடன் முண்டியடித்த மக்கள் கூட்டம் திருகோணமலை இராணுவ களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ 13 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை இன்றும் குறைந்த தங்கம் விலை; இரட்டிப்பு மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்! கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி எரிபொருள் களஞ்சிய முனையத்தில் டீசல் கசிவு; வாளிகள் கேன்களுடன் முண்டியடித்த மக்கள் கூட்டம்

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி

 வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கொழும்பில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் தனது அஞ்சலிகளைச் செலுத்தினார்.

 மாவீரர் வாரம் இன்று(21) ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாவீரர் வாரத்தின் முதல் நாளில் கொழும்பில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் தனது அஞ்சலிகளைச் செலுத்தினார்.

அந்தவகையில் மாவீரர் துயிலமில்லத்தினைத் தாங்கிய உருவப்படத்திற்கு சுடரேரற்றி, மலர் தூவி, மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளைச் செலுத்தினார்.

மேலும் 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்திற்கான பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கென தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கொழும்பில் தங்கியுள்ள நிலையில் அவரால் இவ்வாறு மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"