BREAKING
இன்றும் குறைந்த தங்கம் விலை; இரட்டிப்பு மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்! கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி எரிபொருள் களஞ்சிய முனையத்தில் டீசல் கசிவு; வாளிகள் கேன்களுடன் முண்டியடித்த மக்கள் கூட்டம் யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற மோசமான சம்பவம்; 21 மாணவர்கள் கைது யாழில் விசேட அதிரடிப்படையினரால் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது இன்றும் குறைந்த தங்கம் விலை; இரட்டிப்பு மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்! கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி எரிபொருள் களஞ்சிய முனையத்தில் டீசல் கசிவு; வாளிகள் கேன்களுடன் முண்டியடித்த மக்கள் கூட்டம் யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற மோசமான சம்பவம்; 21 மாணவர்கள் கைது யாழில் விசேட அதிரடிப்படையினரால் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரிடம் வழிப்பறி; பொலிஸார் தீவிர விசாரணை

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரிடம் வழிப்பறி; பொலிஸார் தீவிர விசாரணை

குருநாகலில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை வழிமறித்து, அவரது பணப்பையை கொள்ளையிட்டுவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலன்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், பயணத்தின்போது ஏற்பட்ட களைப்பைப் போக்குவதற்காக கெக்கிராவை நகருக்கு அருகிலுள்ள வயல் நிலமொன்றை அண்டிய பிரதான வீதியோரத்தில் உந்துருளியை நிறுத்தி சோளக்கதிர் ஒன்றைச் சாப்பிட்டுள்ளார்.

அப்போது அங்கு சிறிய ரக உந்துருளியில் வந்த இருவர், இளைஞர் யார் என்பதை விசாரிப்பது போன்று அவரிடம் பேச்சுக் கொடுத்து  அவரைத் தாக்கி அவரது பணப்பையைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சந்தேகநபர்களில் ஒருவர் அருகிலிருந்த வயல் நிலத்தை நோக்கித் தப்பிச் சென்றுள்ளதுடன், மற்றையவர் இலக்கத் தகடு இல்லாத சிறிய ரக உந்துருளியில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தின்போது இளைஞர் தனது கைப்பேசியில் பதிவு செய்த காணொளிக் காட்சிகள் தற்போது கவனம் பெற்றுள்ளன. காணொளியில், சந்தேகநபர்களுக்கும் இளைஞருக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல்கள், சந்தேகநபர்களின் உருவங்கள் மற்றும் அவர்கள் தப்பிச் சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சந்தேகநபர்கள் தாங்கள் கல்குளம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறுவதும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் கெக்கிராவை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"