BREAKING
இலங்கை சாரதிகளுக்கு வெளியான முக்கிய தகவல் குடும்ப நிகழ்விற்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம் ; கதறும் உறவுகள் கிளிநொச்சி பெண் கூட்டு பாலியல் வன்புனர்வு; சபையில் சிறீதரன் எம்.பி. கடும் சினம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! யாழில் அதிரடி கைதான வர்த்தகர் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை இலங்கை சாரதிகளுக்கு வெளியான முக்கிய தகவல் குடும்ப நிகழ்விற்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம் ; கதறும் உறவுகள் கிளிநொச்சி பெண் கூட்டு பாலியல் வன்புனர்வு; சபையில் சிறீதரன் எம்.பி. கடும் சினம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! யாழில் அதிரடி கைதான வர்த்தகர் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை

யாழில் அதிரடி கைதான வர்த்தகர் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை

யாழில் அதிரடி கைதான வர்த்தகர் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் விற்பனைக்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த 274 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (19) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் கடற்படைக் கப்பல்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் நகரை அண்மித்த வர்த்தக நிலையமொன்று சோதனையிடப்பட்டது.

இதன்போது சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 274 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட மீன்பிடி வலைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீர்வளத் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"