BREAKING
பெண் ஊழியருக்குக் குடை பிடித்த அரச உத்தியோகத்தர்; விவாகரத்து வரை சென்ற குடும்பம்! மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவருக்கு வாழ்நாள் தடை! சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு 8 ஆண்டு சிறை செம்மணி மனிதப் புதைகுழி; சோமரத்ன ராஜபக்ச மறுப்பு இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்! பெண் ஊழியருக்குக் குடை பிடித்த அரச உத்தியோகத்தர்; விவாகரத்து வரை சென்ற குடும்பம்! மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவருக்கு வாழ்நாள் தடை! சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு 8 ஆண்டு சிறை செம்மணி மனிதப் புதைகுழி; சோமரத்ன ராஜபக்ச மறுப்பு இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு ஆண்டு சிறை

சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு ஆண்டு சிறை

 சிறுவன் ஒருவனைப் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்திற்காக, பிக்குவிற்கு எட்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

அனுராதபுர சிறுவர் குற்றங்களுக்கான சிறப்பு உயர் நீதிமன்ற நீதிபதி சந்துன் விதானகே, இந்த தீர்ப்பை அளித்தார்.

குறித்த நபருக்கு 1,500 ரூபாய் அபராதம் விதித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 300,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறும் உத்தரவிட்டார்.

தண்டனை விதிக்கப்பட்ட நபர், சூரியவெவ, வெனிவெலார, இலக்கம் 108 இல் வசிக்கும் சூரியவெவ சுமநாதம்ம தேரர் ஆவார்.

2021 ஏப்ரல் 4 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில், அனுராதபுர உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்ட தம்புத்தேகம பகுதியில் இந்தக் குற்றத்தைச் செய்ததாக, சட்டமா அதிபரால் அவர் மீது அனுராதபுர சிறுவர் குற்றங்களுக்கான சிறப்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"