BREAKING
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தை மறுசீரமைக்க நிபுணர் குழு நியமனம் கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் பிணையில் விடுதலை நாமல் ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் இன்று பிறப்பித்த முக்கிய உத்தரவு அதிகாலையில் ஏலக்காயுடன் வேனில் சென்ற இந்தியப் பிரஜைகளுக்கு நடந்த சம்பவம் தந்தை தயாரித்த வினாபத்திரம்; அரச பரீட்சையில் முதலிடம் பெற்ற மகன் ; சபையில் வெளியான தகவல் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தை மறுசீரமைக்க நிபுணர் குழு நியமனம் கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் பிணையில் விடுதலை நாமல் ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் இன்று பிறப்பித்த முக்கிய உத்தரவு அதிகாலையில் ஏலக்காயுடன் வேனில் சென்ற இந்தியப் பிரஜைகளுக்கு நடந்த சம்பவம் தந்தை தயாரித்த வினாபத்திரம்; அரச பரீட்சையில் முதலிடம் பெற்ற மகன் ; சபையில் வெளியான தகவல்

நாமல் ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் இன்று பிறப்பித்த முக்கிய உத்தரவு

நாமல் ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் இன்று பிறப்பித்த முக்கிய உத்தரவு

நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் பணச்சலவை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணையை நிறைவு செய்வதாகக் கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்குத் தொடர்பான ஆரம்ப அறிக்கையும் சான்று பொருட்களும் ஏற்கனவே கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதவான் நீதிமன்றில் அறிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவித்த குற்றப் புலனாய்வு திணைக்களம், இந்தச் சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கு விசாரணையை நிறைவு செய்யுமாறு கோரிக்கை விடுத்தது.

மேலும், இந்தச் சம்பவத்தின் முதல் சந்தேகநபரான கபில சந்திரசேன ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும், அவரது மரணப் பரிசோதனை அறிக்கை இதுவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தனர்.

அத்துடன், பிரியங்கா நியோமாலி மற்றும் சமிந்திர ராஜபக்ஷ ஆகிய இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக தற்போது திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கின் நான்காவது சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷ, இதே சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு இணங்க, கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை (19) வரை அவரைச் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"