BREAKING
அதிகாலையில் ஏலக்காயுடன் வேனில் சென்ற இந்தியப் பிரஜைகளுக்கு நடந்த சம்பவம் தந்தை தயாரித்த வினாபத்திரம்; அரச பரீட்சையில் முதலிடம் பெற்ற மகன் ; சபையில் வெளியான தகவல் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி யாழில் 16 பேருக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம் ; விதிக்கப்பட்ட தண்டப்பணம் அதிகாலையில் ஏலக்காயுடன் வேனில் சென்ற இந்தியப் பிரஜைகளுக்கு நடந்த சம்பவம் தந்தை தயாரித்த வினாபத்திரம்; அரச பரீட்சையில் முதலிடம் பெற்ற மகன் ; சபையில் வெளியான தகவல் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி யாழில் 16 பேருக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம் ; விதிக்கப்பட்ட தண்டப்பணம்

தந்தை தயாரித்த வினாபத்திரம்; அரச பரீட்சையில் முதலிடம் பெற்ற மகன் ; சபையில் வெளியான தகவல்

தந்தை தயாரித்த வினாபத்திரம்; அரச பரீட்சையில் முதலிடம் பெற்ற மகன் ; சபையில் வெளியான தகவல்

தந்தை தயாரித்த வினாபத்திரத்திற்கு அகில இலங்கை ரீதியில் மகன் முதலாம் இடம்பெற்றுக் கொண்ட சம்பவத்தில் முறைக்கேடு நடந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்திற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் பாரிய அளவிலான ஒழுக்க மீறலும் முறைகேடும் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து பேசினார்.

இது தொடர்பில் உடனடியாக விரிவான விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டவர் பரீட்சைத் திணைக்களத்தின் இரகசியப் பிரிவிற்குப் பொறுப்பாகக் கடமையாற்றிய முன்னாள் பிரதிப் பரீட்சை ஆணையாளர் ஒருவரின் பிள்ளை எனவும் தெரிவித்தார்.

தமது பிள்ளை இவ்வாறானதொரு போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவதாயின், நிறுவன ஒழுக்க விதிகள் மற்றும் தார்மீக மரபுகளுக்கு அமைய குறித்த அதிகாரி அப்பொறுப்புகளிலிருந்து நீண்ட காலத்திற்கு முன்னரே விலகியிருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், இங்கு சந்தேகத்திற்கிடமான தொடர் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி நடைபெற்றது. ஆனால், குறித்த அதிகாரி பதவியிலிருந்து விலகியிருப்பது ஜூலை மாதம் 15 ஆம் திகதியாகும். அதாவது பரீட்சைக்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்திற்கு முன்னராகும்.அச்சமயத்தில் வினாத்தாள் தயாரித்தல் மற்றும் அது தொடர்பான அனைத்து இரகசிய நடவடிக்கைகளும் நிறைவடைந்திருந்தன.

அனைத்தையும் செய்து முடித்த பின்னரே அவர் விலகியுள்ளார்.இவ்வாறான பாரிய முறைகேடுகள் தொடர்பில் இலஞ்ச - ஊழல் ஆணைக்குழு உடனடியாக விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார். 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"