BREAKING
Big boss முத்துக்குமரனுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த இன்ஸ்டா பெண் இளைஞர் செய்த தகாத செயல் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல் செம்மணி புதைகுழியில் பு*க்கப்பட்டவர்களுக்கு தொற்றுநோயா; யாழில் ராஜ் சோமதேவாவின் உருவபொம்மை எரிப்பு! தலையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட யாசகர்; பொலிஸார் சந்தேகம் Big boss முத்துக்குமரனுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த இன்ஸ்டா பெண் இளைஞர் செய்த தகாத செயல் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல் செம்மணி புதைகுழியில் பு*க்கப்பட்டவர்களுக்கு தொற்றுநோயா; யாழில் ராஜ் சோமதேவாவின் உருவபொம்மை எரிப்பு! தலையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட யாசகர்; பொலிஸார் சந்தேகம்

செம்மணி புதைகுழியில் பு*க்கப்பட்டவர்களுக்கு தொற்றுநோயா; யாழில் ராஜ் சோமதேவாவின் உருவபொம்மை எரிப்பு!

செம்மணி புதைகுழியில் பு*க்கப்பட்டவர்களுக்கு தொற்றுநோயா; யாழில் ராஜ் சோமதேவாவின் உருவபொம்மை எரிப்பு!

யாழ்ப்பாணம்  செம்மணிப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரியும், செம்மணி புதைகுழி தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரியாலை தபால்கட்டை சந்திக்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமான போராட்டம் அங்கிருந்த பேரணியாக செம்மணி மனித புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி மயானம் வரையில் சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் நடைபெற்றது இன படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனித புதைகுழி காணப்படுகிறது.

ஆனால் செம்மணி மனித புதைகுழி ஆய்வுகளை மேற்கொண்ட தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில் புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகள், தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவில் உயிரிழந்தவர்களை புதைத்ததாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

அதனை நாம் முற்றாக நிராகரிக்கிறோம் என தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் , செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் , புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரினர்.

அத்துடன்ன்செம்மணி மனித புதைகுழி தொடர்பில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை மற்றும் சோமதேவாவின் உருவ பொம்மை என்பவை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது. 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"