BREAKING
விபத்தில் சிக்கிய நண்பனை காப்பற்ற சென்ற STF அதிகாரிக்கு நேர்ந்த கதி ; பறிபோன உயிர்கள் உணவு ஒவ்வாமை ; 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி மயானத்திற்குள் அதிகாரிகளை அதிர வைத்த சம்பவம் ; சமாதியில் பல மில்லியன் பெறுமதியான பொருள் கடந்த மாதத்தில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு ; மத்திய வங்கி தகவல் தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் செய்த தகாத செயல் ; 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம் விபத்தில் சிக்கிய நண்பனை காப்பற்ற சென்ற STF அதிகாரிக்கு நேர்ந்த கதி ; பறிபோன உயிர்கள் உணவு ஒவ்வாமை ; 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி மயானத்திற்குள் அதிகாரிகளை அதிர வைத்த சம்பவம் ; சமாதியில் பல மில்லியன் பெறுமதியான பொருள் கடந்த மாதத்தில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு ; மத்திய வங்கி தகவல் தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் செய்த தகாத செயல் ; 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்

உணவு ஒவ்வாமை ; மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமை ; மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

   இன்று (17) காலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமை காரணமாக வட்டவளை, டெம்பஸ்டோவ் தோட்டப் பாடசாலை ஒன்றில் 35 மாணவர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை உணவை உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட வாந்தி, மயக்கம் மற்றும் நெஞ்சுவலி காரணமாகவே மாணவர்கள் குழு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பிரதேச வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களுக்கு காலை உணவாக சோறு, உருளைக்கிழங்கு, பீட்ரூட் கறி மற்றும் கீரைவகை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் 3 ஆம் தரம் தொடக்கம் 5 ஆம் தரம் வரை கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு ஒவ்வாமை காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் நிலைமை பாரதூரமானதாக இல்லை என மாவட்ட வைத்தியர் தெரிவித்தார்.சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸாரும், பொது சுகாதார பரிசோதகர்களும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"