BREAKING
உணவு ஒவ்வாமை ; 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி மயானத்திற்குள் அதிகாரிகளை அதிர வைத்த சம்பவம் ; சமாதியில் பல மில்லியன் பெறுமதியான பொருள் கடந்த மாதத்தில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு ; மத்திய வங்கி தகவல் தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் செய்த தகாத செயல் ; 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம் யாழில் புலிகளின் தலைவரின் வீடு சென்ற திருமாவளவன் ; செம்மணியில் அஞ்சலி உணவு ஒவ்வாமை ; 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி மயானத்திற்குள் அதிகாரிகளை அதிர வைத்த சம்பவம் ; சமாதியில் பல மில்லியன் பெறுமதியான பொருள் கடந்த மாதத்தில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு ; மத்திய வங்கி தகவல் தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் செய்த தகாத செயல் ; 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம் யாழில் புலிகளின் தலைவரின் வீடு சென்ற திருமாவளவன் ; செம்மணியில் அஞ்சலி

கடந்த மாதத்தில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு ; மத்திய வங்கி தகவல்

கடந்த மாதத்தில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு ; மத்திய வங்கி தகவல்

2026 ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் 192.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2026 செப்டெம்பர் மாதத்தில் பதிவான 185.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் இது 3.8 சதவீத அதிகரிப்பாகும்.

அதேவேளை, 2025 ஒக்டோபர் மாதத்தில் பதிவான 186.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் இது 3.5 சதவீத வருடாந்த அதிகரிப்பையும் பதிவு செய்துள்ளது.

எவ்வாறாயினும், 2026 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான ஆண்டின் முதல் 10 மாதங்களில் நாட்டின் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 2,437.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், இது 8.3 சதவீத வீழ்ச்சியாகும்.

இதன்படி, ஒக்டோபர் மாத சுற்றுலா வருமானம் மாதாந்த மற்றும் வருடாந்த அடிப்படையில் வளர்ச்சியைக் காட்டியிருந்தாலும், 2026ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கான ஒட்டுமொத்த வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"