BREAKING
அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய தகவல் இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த கதி இலங்கை வந்த இளம் தொழிநுட்ப அதிரடி கைது ; பலகோடி ரூபாய் பெறுமதியான ஆபத்தான பொருள் மீட்பு இன்றும் நீதிமன்றுக்கு வந்த நாமல் ராஜபக்ஷ ; சிஐடிக்கு பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு லாஃப்ஸ் எரிவாயு ​நிறுவன அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பு அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய தகவல் இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த கதி இலங்கை வந்த இளம் தொழிநுட்ப அதிரடி கைது ; பலகோடி ரூபாய் பெறுமதியான ஆபத்தான பொருள் மீட்பு இன்றும் நீதிமன்றுக்கு வந்த நாமல் ராஜபக்ஷ ; சிஐடிக்கு பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு லாஃப்ஸ் எரிவாயு ​நிறுவன அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பு

இலங்கை வந்த இளம் தொழிநுட்ப அதிரடி கைது ; பலகோடி ரூபாய் பெறுமதியான ஆபத்தான பொருள் மீட்பு

இலங்கை வந்த இளம் தொழிநுட்ப அதிரடி கைது ; பலகோடி ரூபாய் பெறுமதியான ஆபத்தான பொருள் மீட்பு

ரூ. 4 கோடியே 38 லட்சத்து 40 ஆயிரம் பெறுமதியான 'குஷ்' ரக போதைப்பொருள் தொகையுடன் நபர் ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய தொழில்நுட்ப நிபுணரொருவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் இந்த 'குஷ்' போதைப்பொருளை தாய்லாந்தில் விலைக்கு வாங்கி, மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு வந்துள்ளதுடன், அங்கிருந்து மலேசிய விமான சேவைக்குச் சொந்தமான MH 179 இலக்க விமானம் மூலம் இன்று (16) அதிகாலை 12 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அங்கு அவர் கொண்டு வந்த இரண்டு உடமைகளுக்குள் இருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள் பொதி செய்யப்பட்டிருந்த இரண்டு பெட்டிகளுக்குள் இந்த 'குஷ்' போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் எடை 4 கிலோ 384 கிராம்கள் ஆவதுடன், அது ஐந்து பக்கெட்டுகளாக பொதி செய்யப்பட்டிருந்தது.

இது குறித்த மேலதிக விசாரணைகளுக்காக பறிமுதல் செய்யப்பட்ட 'குஷ்' போதைப்பொருள் தொகையுடன் சம்பந்தப்பட்ட விமானப் பயணியை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"