ஒரு சமயம் நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறேன். இன்னொரு சமயம் ஒரு தடியை எடுத்து சுழற்றுகிறேன் என பலங்கொடை கஸ்ஸப தேரர் மேற்கொண்ட சத்தியாக்கிரகம் ஒரு ஒழுங்கற்ற சதி என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
கொழும்பு விகாரமாதேவி திறந்தவெளி அரங்கில் நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தனது அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை விமர்சிப்பதற்கோ அல்லது எதிர்ப்பு தெரிவிப்பதற்கோ எந்தத் தடையும் இல்லை என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அவற்றை முறையான சட்டரீதியான கட்டமைப்பிற்குள் செய்ய வழிகள் இருந்தாலும், இத்தகைய விசித்திரமான நடத்தைகளில் ஈடுபடுபவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பது குறித்து ஒரு பயங்கரமான சித்திரத்தை உருவாக்குகிறார்கள். ஒழுக்கமற்ற, ஒழுங்கமைக்கப்படாத, இலக்கற்ற, நோக்கமற்ற, குருட்டுத்தனமான போராட்டங்கள் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்.
அதிலிருந்து ஒரு அராஜகம் உருவாகிறது. இப்போது இந்த நாட்களில் ஆங்காங்கே எழும் போராட்டங்களைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? நாளை என்ன பைத்தியக்காரத்தனம் நடக்கும் என்று தெரியவில்லை.
ஒரு சமயம் நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறேன். இன்னொரு சமயம் ஒரு தடியை எடுத்து சுழற்றுகிறேன். யோசித்துப் பாருங்கள். இதிலிருந்து என்ன நடக்கிறது? இந்த அராஜகம் நாளை என்ன பைத்தியக்காரத்தனம் நடக்கும் என்று தெரியவில்லை.
தொலைநோக்கு கொண்ட, ஒழுங்கமைக்கப்பட்ட, ஒழுக்கமான அரசாங்க விமர்சனத்திற்கு நாம் அனைவரும் ஆதரவளிப்போம் என்று அழைப்பு விடுக்கிறோம். ஆனால் நாட்டிற்கும் மக்களுக்கும் நாளை என்ன செய்வார்கள் என்று தெரியாதவற்றை போராட்டங்கள் என்று சொல்ல முடியாது.
அவை சதித்திட்டங்கள். அவை எந்த அளவிற்கு நாட்டிற்கு தீங்கு விளைவிக்கின்றன. எனவே, இந்த நாட்டின் மக்களும் நாம் அனைவரும் விழித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக