BREAKING
வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்குச் சென்ற 2,994 இலங்கையர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காத்திருக்கும் கனமழை ; விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை சுற்றுலா விடுதியில் யுவதி கொலை; கைவிலங்குடன் தப்பிய காதலன்! மிசிசிப்பி ஆற்றில் சரக்குக் கப்பல் உல்லாசக் கப்பலுடன் மோதி விபத்து இலங்கையில் பிறப்பு வீதம் சரிவு; 40,000 பேரால் குறந்த முதலாம் தர மாணவர் சேர்க்கை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்குச் சென்ற 2,994 இலங்கையர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காத்திருக்கும் கனமழை ; விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை சுற்றுலா விடுதியில் யுவதி கொலை; கைவிலங்குடன் தப்பிய காதலன்! மிசிசிப்பி ஆற்றில் சரக்குக் கப்பல் உல்லாசக் கப்பலுடன் மோதி விபத்து இலங்கையில் பிறப்பு வீதம் சரிவு; 40,000 பேரால் குறந்த முதலாம் தர மாணவர் சேர்க்கை

மிசிசிப்பி ஆற்றில் சரக்குக் கப்பல் உல்லாசக் கப்பலுடன் மோதி விபத்து

மிசிசிப்பி ஆற்றில் சரக்குக் கப்பல் உல்லாசக் கப்பலுடன் மோதி விபத்து

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள மிசிசிப்பி ஆற்றில் சரக்குக் கப்பலொன்றுடன் உல்லாசக் கப்பல் மோதியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற இவ்விபத்தில், 'தி அமெரிக்கன் ஹெரிடேஜ்' (The American Heritage) என்ற உல்லாசக் கப்பல், 'அட்லாண்டிக் ஆஸ்பால்ட்' (Atlantic Asphalt) என்ற சரக்குக் கப்பலுடன் மோதியுள்ளது.

இதனைத் தொடர்ந்து உல்லாசக் கப்பல் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதுடன், குறைந்தது 180 பேர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கப்பல் கவிழ்ந்ததைத் தொடர்ந்து உயிர்காப்பு அங்கிகளை அணிந்திருந்த பயணிகள் ஆற்றில் தத்தளித்த நிலையில், மீட்புக் குழுவினர் படகுகள் மூலம் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அருகிலிருந்த ஏனைய சரக்குக் கப்பல்கள் மற்றும் படகுகளும் மீட்புப் பணிகளுக்கு உதவியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.  

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் எவருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், 'தி அமெரிக்கன் ஹெரிடேஜ்' கப்பலை இயக்கும் அமெரிக்கன் குரூஸ் லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பயணிகளும் பணியாளர்களும் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரது நலன் குறித்தும் தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"