BREAKING
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காத்திருக்கும் கனமழை ; விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை சுற்றுலா விடுதியில் யுவதி கொலை; கைவிலங்குடன் தப்பிய காதலன்! மிசிசிப்பி ஆற்றில் சரக்குக் கப்பல் உல்லாசக் கப்பலுடன் மோதி விபத்து இலங்கையில் பிறப்பு வீதம் சரிவு; 40,000 பேரால் குறந்த முதலாம் தர மாணவர் சேர்க்கை உணவக உரிமையாளர், மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ; இளைஞர் அதிரடி கைது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காத்திருக்கும் கனமழை ; விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை சுற்றுலா விடுதியில் யுவதி கொலை; கைவிலங்குடன் தப்பிய காதலன்! மிசிசிப்பி ஆற்றில் சரக்குக் கப்பல் உல்லாசக் கப்பலுடன் மோதி விபத்து இலங்கையில் பிறப்பு வீதம் சரிவு; 40,000 பேரால் குறந்த முதலாம் தர மாணவர் சேர்க்கை உணவக உரிமையாளர், மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ; இளைஞர் அதிரடி கைது

இலங்கையில் பிறப்பு வீதம் சரிவு; , பேரால் குறந்த முதலாம் தர மாணவர் சேர்க்கை

இலங்கையில் பிறப்பு வீதம் சரிவு; , பேரால் குறந்த முதலாம் தர மாணவர் சேர்க்கை

  நாட்டில் ஆண்டுதோறும் முதலாம் தரத்திற்கு மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை சுமார் 40,000 பேரால் குறைந்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் குழந்தைகள் பிறக்கும் வீதம் குறைந்து வருவதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக, ஆண்டுதோறும் சுமார் 3 இலட்சம் குழந்தைகள் பாடசாலைகளில் சேர்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், புதிதாக 309 ஆரம்பப் பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் 31 ஆரம்பப் பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்ட மதுர செனவிரத்ன, இந்தப் பாடசாலைகள் அனைத்தும் ஒரே மாதிரியான கட்டிட வடிவமைப்பில் நிர்மாணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆரம்பப் பாடசாலைகளில் நவீன உலகிற்கு ஏற்ற வகையிலான கழிப்பறை வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலும் சில மாற்றங்களைச் செய்வதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"