BREAKING
உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்திய ஆசிரியை; விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி! 'யசிரு புதா' படகில் ரூ. 1.5 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள்; s முதலமைச்சர் விஜய் இன் ‘வெற்றி இல்லம்’;பின்னணியில் ஜோதிடமா! மத்திய வங்கி ஆளுநரைப் போன்று AI காணொளிகள்; மக்களே ஏமாறாதீர்கள்! இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை சரிவு! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்திய ஆசிரியை; விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி! 'யசிரு புதா' படகில் ரூ. 1.5 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள்; s முதலமைச்சர் விஜய் இன் ‘வெற்றி இல்லம்’;பின்னணியில் ஜோதிடமா! மத்திய வங்கி ஆளுநரைப் போன்று AI காணொளிகள்; மக்களே ஏமாறாதீர்கள்! இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை சரிவு! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

முதலமைச்சர் விஜய் இன் வெற்றி இல்லம்;பின்னணியில் ஜோதிடமா!

முதலமைச்சர் விஜய் இன் வெற்றி இல்லம்;பின்னணியில் ஜோதிடமா!

  தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழிச் சாலையில் உள்ள ‘பாமணி இல்லம்’ அரசு பங்களாவைத் தனது புதிய அலுவல்பூர்வ இல்லம் மற்றும் முகாம் அலுவலகமாகத் தேர்வு செய்து பணிகளைத் தொடங்கியுள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட இந்த இல்லத்திற்கு ‘வெற்றி இல்லம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த இடத்தைத் தேர்வு செய்ததன் பின்னணியில் நிர்வாகக் காரணங்களுடன் ஜோதிட ஆலோசனைகளும் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்திற்கு தினமும் பயணிப்பதால் பொதுமக்களுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கவே முதல்வர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், அரசுத் துறை உயர் அதிகாரிகள் எளிதாக வந்து செல்லவும், அவசர ஆலோசனைகளை நடத்தவும் மையப் பகுதியாக இருப்பதால் இந்த இல்லம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ‘பாமணி’ என்பது சோழர் கால வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த காவிரியின் கிளை ஆற்றின் பெயர் என்பதால், ஜோதிட ஆலோசனையின் பேரிலேயே இந்த இல்லம் தேர்வு செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஆனால், ஜோதிடம் அல்லது வாஸ்து காரணமாகவே இந்த இல்லம் தேர்வு செய்யப்பட்டதா என்பது குறித்து முதலமைச்சர் தரப்பிலோ அல்லது அரசுத் தரப்பிலோ எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இருப்பினும், ‘வெற்றி இல்லம்’ என்ற புதிய பெயரும் அதன் பின்னணியும் சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.அரசு சேவைகள் தற்போது பாமணி இல்லத்தின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் அங்கிருந்தபடியே தனது அரசுப் பணிகளையும் அதிகாரிகளுடனான ஆலோசனைகளையும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார்.

இனிவரும் நாட்களில் முதலமைச்சரின் முக்கிய நிர்வாக நடவடிக்கைகள் ‘வெற்றி இல்லம்’ முகாம் அலுவலகத்தில் இருந்து செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை முன்னதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலத்தில் இந்த பங்களாவை பயன்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"