BREAKING
உதயநிதி ஸ்டாலின் கைது; தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் – பல இடங்களில் பரபரப்பு யோசித ராஜபக்சவின் வெளிநாட்டு பயண கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு 18 வயதில் கல்லூரி பேராசிரியரான அமெரிக்க இளைஞர்; கின்னஸ் உலக சாதனை படைத்து அசத்தல் மேர்வின் சில்வா வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டதாக வெளியான தகவலை நடிகை ரிது ஆகர்ஷா மறுப்பு தமிழ்நாட்டில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்; வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் உதயநிதி ஸ்டாலின் கைது; தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் – பல இடங்களில் பரபரப்பு யோசித ராஜபக்சவின் வெளிநாட்டு பயண கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு 18 வயதில் கல்லூரி பேராசிரியரான அமெரிக்க இளைஞர்; கின்னஸ் உலக சாதனை படைத்து அசத்தல் மேர்வின் சில்வா வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டதாக வெளியான தகவலை நடிகை ரிது ஆகர்ஷா மறுப்பு தமிழ்நாட்டில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்; வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

அநுராதபுரத்தில் அதிரடி வேட்டை: கிராம் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன் - வடக்கு மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிரடி!

அநுராதபுரத்தில் அதிரடி வேட்டை: கிராம் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன் - வடக்கு மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிரடி!

அநுராதபுரம் கவரக்குளம் - குடாவெவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களை வைத்திருந்த இளைஞன் ஒருவரை வடக்கு மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று (30) கைது செய்துள்ளனர்.


 வடக்கு மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குடாவெவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த நபர் சிக்கியுள்ளார்.


 கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து சுமார் 150 கிராம் ஹெரோயின் மற்றும் 80 கிராம் ஐஸ் (Ice) போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி சந்தையில் மிக அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


கைது செய்யப்பட்டவர் குடாவெவ, கல்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நீண்டகாலமாக இப்பகுதியில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டாரா அல்லது இதன் பின்னணியில் உள்ள பெரிய மாபியா கும்பல் எது என்பது குறித்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


சந்தேக நபர் தற்போது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கவரக்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கவரக்குளம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"