BREAKING
இலங்கைக்கு வந்த 3,000 மெற்றிக் தொன் எரிவாயு; லாப்ஸ் நிறுவனம் அறிவிப்பு ருவன்வெலிசாய போராட்ட இடத்திற்கு செல்ல தடை வெள்ளம் என போலி காணொளி வெளியிட்டால் சட்ட நவடிக்கை; கடும் எச்சரிக்கை! இன்று முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும்; மக்கள் மகிழ்ச்சி! நில்வளவை மற்றும் ஜின் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் இலங்கைக்கு வந்த 3,000 மெற்றிக் தொன் எரிவாயு; லாப்ஸ் நிறுவனம் அறிவிப்பு ருவன்வெலிசாய போராட்ட இடத்திற்கு செல்ல தடை வெள்ளம் என போலி காணொளி வெளியிட்டால் சட்ட நவடிக்கை; கடும் எச்சரிக்கை! இன்று முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும்; மக்கள் மகிழ்ச்சி! நில்வளவை மற்றும் ஜின் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம்

ருவன்வெலிசாய போராட்ட இடத்திற்கு செல்ல தடை

ருவன்வெலிசாய போராட்ட இடத்திற்கு செல்ல தடை

ருவன்வெலிசாய போராட்ட இடத்திற்கு செல்ல தொல்பொருள் திணைக்களம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அநுராதபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாயவிற்கு அருகில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ற பகுதிக்குள் வர்த்தகர்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தின் எல்லைகள் அடையாளப்படுத்தப்பட்டு எச்சரிக்கைப் பலகைகளும் நிறுவப்பட்டுள்ளன.

பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் அப்பகுதியில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், தொல்பொருள் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு வர்த்தகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, நேற்று (12) குறித்த இடத்தில் பலாங்கொட கஸ்ஸப தேரர் தலைமையிலான குழுவினருக்கும், ராஜாங்கனய சத்தாரத்தன தேரர் தலைமையிலான பொதுமக்கள் குழுவினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலைத் தொடர்ந்து பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளபனர்.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"