தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய், தமிழக அரசின் சார்பில் தயாரிக்கப்படவுள்ள விளம்பரம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகத் இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே 'ஜனநாயகன்' திரைப்படமே தனது கடைசித் திரைப்படம் என விஜய் அறிவித்திருந்த நிலையில் ரசிகள் கவலையில் ஆழ்ந்தனர்.
நடிகர் விஜய் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.
இந்த விளம்பரத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இதற்கான படப்பிடிப்பு இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத ஆரம்பத்திலோ நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக